பசுமை தீர்ப்பாயம்
காணும் பொங்கலன்று அளிக்கப்படும் அரசு விடுமுறையை ரத்து செய்யத் தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரைப்போம் எனப் பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை.
காணும் பொங்கலன்று மெரினா கடற்கரைக் குப்பை கூளமாக மாறுவதற்கு மக்கள் தான் காரணம். அன்றைய தினம் அரசு விடுமுறையை ரத்து செய்யப் பரிந்துரைப்போம் என்றும் தெரிவித்துள்ளது.
Ref: தினகரன்.
பரிந்துரை செய்திருக்கலாம்.
இதைச் சொல்லும்போது மக்கள் குப்பைகளைக் கொட்டாமலும், மாசு படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசுக்குச் சரியாக
சரி இதை விட்டுவிட்டாலும், இதை விட அதிகமாகத் தீபாவளி நேரங்களில் இரண்டு நாட்கள் குப்பை கூளங்களும், ஆகாய காற்று சுவாசிக்கத்தகாதவாறு நாடு முழுவதும் நடப்பதைக்
கண்களால் காணாமல் உணராமல் இது போன்ற அறிக்கைகளைப் பார்க்கும் போது இதில் உள் நோக்கம் உள்ளதோ என்ற எண்ணம் மக்கள் மனதில் வருவதை நீதிமன்றம் தாமாக வந்து எடுத்துச் செயல்பட்டால் அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும்.
எங்கு எந்த தப்பு நடந்தாலும் மதம் சாதி என்று உள்ளே பகுத்திவிட்டால்
கற்றவரும், அதிகாரத்தில் உள்ளவரும் நியாயமானவர்களும் தலை மறைவாகிவிடுவது கவலையளிக்கிறது.
வேதனையானது.
சமுதாயத்தில் அதிகமானவர்கள் தவறு செய்தால் அது உண்மை என ஏற்றுக் கொள்வது அவமான சின்னங்களே!
-SA

