கரநாடகம் செய்யும் உதவி
கர்நாடகத்தில் அரசுத் திட்ட ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு- சித்தராமையா அறிவிப்பு
முதல்-மந்திரி சித்தராமையா கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதில் அரசுத் திட்டப் பணி ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “கர்நாடக பொது கொள்முதலில் வெளிப்படைத்தன்மை சட்டத்தின் கீழ் தலித் மற்றும் பழங்குடியினருக்கு அரசுத் திட்டப் பணி ஒப்பந்தங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
அதில் தற்போது முஸ்லிம் சமூகத்திற்கு இந்த திட்டப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ரூ.2 கோடி வரையிலான பணிகளில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும். முஸ்லிம்கள் மட்டுமின்றி இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் 1ஏ பிரிவில் சமூகங்களுக்கும் இந்த இட ஒதுக்கீடு பொருந்தும். அதே போல் அரசுத் துறைகளுக்கான சரக்குகள் கொள்முதலிலும் மேற்கண்ட சமூகங்களுக்கு ரூ.1 கோடி வரையிலான பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது” என்றார்.
அரசுத் திட்ட ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது முஸ்லிம் பட்ஜெட், ஹலால் பட்ஜெட் என்று கடுமையாக அக்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
-செய்தி.
இது போல் தமிழகத்தில் அரசிடம் கேட்டுப் பெற முயல வேண்டும். அனைத்திலும் அடி பணிந்து வாழ்வதே வாழ்க்கை எனக் கிடைக்கும் சொற்ப சுகத்திற்காகப் பதவிகளில் தலைமைகளில் நேரத்தைக் கடத்தி சமுதாயத்தை பாழாக்கக்கூடாது.
-SA
Location
Be the first to review “கரநாடகம் செய்யும் உதவி”
You must be logged in to post a review.


Reviews
There are no reviews yet.