கல்வி நம்மைக் கறைசேர்க்கும்.

கல்வி நம்மைக் கறைசேர்க்கும்.

Popular

கல்வி நம்மைக் கறைசேர்க்கும்.

தினமும் பலவிதமான உதவிகள் செய்து ஏழைகளுக்கு உணவு கொடுக்க ஏற்பாடுகள் நாடு முழுவதும் செய்யப்படுவது சிறப்பான செயல்.

இதில் உண்மையில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவிகள் போய்ச் சேருகின்றதா என்பதில் அதிக கவனம் தேவை.

அரசு ரேசன் கார்ட் உள்ளவர்களுக்கு மாதம் பணம் கொடுத்து உதவுகிறது. அதிலும் மேல் மட்டத்தில் அல்லது அரிசி வேண்டாம் என்பவர்களுக்குக் கிடையாது என்ற கட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. புரிந்து கொள்ள வேண்டிய விபரம்.

தாய் தந்தை இல்லாது நம்மில் பல மாணவ மாணவிகள் கல்லூரி படிப்பைக் கனவாக நினைப்பவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்கள் அதை நிறைவு செய்தால் அவர் வாழ்வு மட்டுமல்ல அவருக்கு வரப்போகிற மணமகள், அதன் பின் குழந்தைகள், குடும்பம் இனி யாரிடமும் கை ஏந்தும் நிலைக்கு வராது.

Brotherhood Charitable Trust

இதற்கான செயலைச் செய்வது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் கல்வி கற்று பட்டம் பெற்று மேல் நிலைக்கு வருபவர்களை நாம் கண்டு உள்ளம் மகிழ வேண்டும்.

நிரந்தர தீர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது சிறப்பான செயல். ஒரு நேர உணவு கொடுத்து நாம் பெருமிதம் அடைவதை விட இது போன்று திறமை உள்ள மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தி சமுதாய முன்னேற்ற நலனுக்குப் பாடுபட, கை கொடுக்க ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்வது சிறந்த செயல்.

வாழ்த்துக்கள்.
-SA

Location

Other Place,Chennai CH,Tamilnadu

Reviews

There are no reviews yet.

Be the first to review “கல்வி நம்மைக் கறைசேர்க்கும்.”