செய்த பாவத்திற்கு மன்னிப்பு

செய்த பாவத்திற்கு மன்னிப்பு

Popular

கண்ணியத்திற்குரிய ஆலிம்
பெருமக்களுக்கு

இந்த புனிதமான ரமலான்
மாதம் கடல் அளவு பாவம் செய்திருந்தாலும் இறைவன்
நம்மை மன்னிக்கும் மாதம் என்று
இஸ்லாமிய மக்களுக்கு
எடுத்துச் சொல்வதற்கு முன்
கொஞ்சம் சிந்தித்து விட்டு எடுத்துச் சொல்லுங்கள்.

அல்லாவிடம் பாவமன்னிப்பு
கேட்டு துவா கேட்கும் பொழுது
பொத்தம் பொதுவாக நாங்கள் அறிந்தும் அறியாமையிலும் செய்த பாவங்களை மன்னித்து விடு அல்லாஹ் என்று கேட்பதைத் தவிர்த்துவிடுங்கள்

நாம் அறிந்து செய்த பாவங்களை
ஒவ்வொன்றாக நினைவில் கொண்டு வந்து அதை ஒவ்வொன்றாக வெட்கப்படாமல் சொல்லி இனி மேல் இந்த பாவங்களைச் செய்யமாட்டேன்
இந்த ஒருமுறை என்னை மன்னித்து
விடு என்று கேட்க சொல்லிக் கொடுங்கள்.

உதாரணமாக:

🔸 யா அல்லாஹ்
ஏழைகளுக்காக உன் பெயரில்
அர்ப்பணிக்கப்பட்ட வக்ஃபு சொத்துகளில் இன்றுவரை குடியிருந்து கொண்டு வாடகை செலுத்தாமல் இருந்து வருகிறேன் என் பாவங்களை மன்னித்து
விடு.

🔸 யா அல்லாஹ்
வக்ஃபு சொத்துகளை எவ்வித கூச்சமின்றி அடுத்தவருக்குத் தாரை வார்க்க உதவி செய்து கமிஷன் பெற்று வயிறு வளர்த்து வருகிறேன் என்னை மன்னித்து விடு

🔸 யா அல்லாஹ்
வக்ஃபு நிர்வாகியாக

வக்ஃபு வாரிய நிர்வாகியாக இருந்து கொண்டு வேலியே பயிரை மேய்ந்த கதையாக வக்ஃபு சொத்துகளை முறைகேடு செய்து வாழ்ந்து வருகிறேன். என்னை மன்னித்து விடு

🔸 யா அல்லாஹ்
என் கண் முன்னே உன் சமூகம் பட்டினியால் வாடி நிற்கும் பொழுது அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு மூன்று தலைமுறைக்குச் சொத்துகளைச் சேர்த்து வைத்திருக்கிறேன். என்னை மன்னித்து விடு

🔸 யா அல்லாஹ்
கல்விக் கட்டணம் கட்ட வழியின்றியும், மருத்துவ வசதியின்றியும், ஏழை மக்கள் என் கண் முன்னே அலைந்து திரிவதைப் பார்த்துக் கொண்டு அவர்களுக்கு உதவாமல் மீண்டும் மீண்டும் ஹஜ் பயணம் உம்ரா பயணம் என்று உல்லாச பயணம் மேற்கொண்டு வருகிறேன். என்னை மன்னித்து விடு

🔸 யா அல்லாஹ்
தரிக்கா சண்டைகளை சமூகத்தில் ஏற்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்தி
தெரிந்தோ தெரியாமலோ இந்த சமூகம் பிரிந்து கிடக்க காரணமாகி விட்டேன். என்னை மன்னித்து விடு

🔸 யா அல்லாஹ்
இஸ்லாமியச் சமூகத்தின் வாக்கு வங்கியை என் பலத்திற்கு ஏற்ப உருவாக்கி வைத்துக்கொண்டு ஒரு சீட்டிற்கும் இரண்டு சீட்டிற்கும் இஸ்லாமியச் சமூகத்தை என் சுயநலத்திற்காக அடகு வைத்து வாழ்ந்து வருகிறேன். என்னை மன்னித்து விடு.

இவ்வாறு மன்னிப்பு கேட்டால்
தான் மீண்டும் அந்த தவற்றை நாம்
செய்யக்கூடாது என்று நம் மனதில்
பதியும்.

இதைத் தவிர்த்து பொத்தம் பொதுவாக அல்லாஹ்விடம் மன்னிப்பு
கேட்பது என்பது என் பாவங்களை மன்னித்து கொண்டே இரு. நான் திருத்த போவதில்லை என்று அர்த்தமாகிவிடும்.

பாவங்களைச் செய்தால்
அல்லாஹ் நம்மை மன்னிப்பான்
என்று சொல்லிக் கொடுக்கும்
மார்க்க அறிஞர்கள் பாவங்களைச் செய்தால் எந்தெந்த பாவங்களுக்கு என்ன வகையான தண்டனை என்று விளகமாகச் சொல்லித் தரவேண்டும்.

🔹 வக்ஃபு சொத்துகளைத் திருடிச்
சாப்பிட்டால் என்ன தண்டனை?

🔹 வக்ஃபு சொத்துகளைக் கொள்ளையடித்தால் என்ன தண்டனை?

🔹சமூகத்தை வஞ்சித்து வாழ்பவருக்கு என்ன தண்டனை?

🔹சமூகத்தை அரசியல்
சுய இலாபத்திற்காக அடகு
வைப்பவருக்கு என்ன தண்டனை?
என்று தெளிவாக விளக்கம் அளித்து விட்டு

அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

எம்.ரஹ்மத்துல்லா B.A,B.L.,
தலைவர்
தமிழ்நாடு வக்ஃபு அன்ட் பர்ஷனல் லா கவுன்சில்
8610496476
-வாட்சப்பில் படித்தது.

குற்றம் செய்தால் இறந்த பின் பலன் எனச் சொல்லும் ஆயிரக் கணக்கான பேரைத் தெரு ஒவ்வொன்றிலும் பார்க்கலாம்.

தவரு செய்பவர்களைத் இவர்கள் தடுத்துப் பேச வலிமையின்றி ஒதுங்குவது ஏன்? எல்லாம் எண் சாண் உடம்பிற்காகவா? இதில் பக்தி எங்கே?
-SA

Location

Other Place,Chennai CH,Tamilnadu

Reviews

There are no reviews yet.

Be the first to review “செய்த பாவத்திற்கு மன்னிப்பு”