நோண்பு உணவு

நோண்பு உணவு

Popular

போற போக்கப் பார்த்தால் ரமளான்🫂 ஈகை மாதம் என்பது போய் சோத்து மாதம் ஆகிவிடும் போல் உள்ளது

ஆளாளுக்கு ஆள் வசூல் செய்து
சஹர் உணவு சட்டி சட்டியா தயார்செய்து
தின்று தீர்க்கின்றனர்.

இன்றைய கால முஸ்லீம்களின் பொதுநல சேவை என்பது சட்டி சட்டியாகச் சோற்றைப் பங்கு வைப்பது அல்லது பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வது என்கிற அளவில் மட்டுமே சுருங்கிப்போய் உள்ளது.
சமூக வலைத்தளங்களைத் திறந்தால் எங்குப்பார்த்தாலும் ஒரே சோறு சோறு,
சோற்றுக்கு ஏங்குகிற செய்தியே நிரம்பிவழிகிறது,

மற்ற சமூகத்தவரிடம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

காமடி நடிகர் ஒருவர்
ஏழைகளைத்தேடிப்போய் அடையாளம் கண்டு அவர்களுக்குத் தொழில்🛺 அமைத்துத் தருவது வீடு கட்டுவது, கடை போட்டுத்தருவது போன்ற வாழ்வாதார தேவைகளைச் செய்துதருகின்றார். அவர் தொழிலைக் குற்றம் சொல்லிக் குறைகூறுபவர்கள் வாழ, உழைத்தவர்களிடம் கை எந்த பழக்கத்தைச் சொல்லும் அவல நிலை.

ஆனால் நாம்

நாம் கோடிக்கணக்கான பணத்தை வசூல் செய்து ஒரு நேர உணவோடு நிருத்திக் கொள்கிறோம்.
ஏன்?
அந்த சஹர் உணவு செய்ய வில்லையென்றால் அவர்கள் நோன்புவைக்க முடியாதா?
எதற்கு இந்த வீண் விரயம்,?

இந்த சோற்று குழுவே (என்னையும் சேர்த்துத்தான்) எல்லா சதக்காவையும் வாங்கி சென்றால் மற்ற தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது?
ஆமாம் இதற்கு முன்பு இதுபோன்ற ஷகர் சாப்பிட்டு கலாச்சாரம் வருவதற்கு முன்பு நாம் நோம்பு நோற்காமலா இருந்தோம்?
எந்த ஊடகத்தைப் பார்த்தாலும் சகர் சாப்பாடு.
சகர் சாப்பாடு உண்மையா சீரணிக்கும் சாப்பாட்டிற்கும் நாம் இவ்வளவு வீண் செய்துவிட்டு சதக்காவிற்கும் பைத்துல்மாலுக்கும் மிகவும் சொற்ப பணமே நாம் வழங்கும் சூழ்நிலை உள்ளது.

ஏற்கனவே மாற்று மத விமர்சனம் பாய்மார்கள் நோம்பு நேரத்தில் விடிய விடிய திங்கிறாங்கனு சொல்கிறார்கள். அது போலத்தான் நம் சொந்தங்களும். நோம்பு நேரத்தில் கானத்தைக் கண்டதுபோல் சாப்பாட்டிற்குப் போட்டிப்போட்டு வீண் விரயம் செய்கிறோம். இந்த உணவு ஏழைகளுக்கும் போகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் நாம் இந்த விஷயத்தில் வீண் விரயம் செய்கிறோம் என்பதையும் மறுக்கக்கூடாது…
-WA: Yasmin. Aakur. G16

Reviews

There are no reviews yet.

Be the first to review “நோண்பு உணவு”