Govt provided so for in Tamilnadu

Popular

திமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்குச் செய்யப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான விஷயங்கள் வருமாறு…..

( கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை உள்ள தகவல்கள்)

1. நீண்ட கால சிறைவாசிகள் விடுதலை.

2. இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு BCM அந்தஸ்து.

3. ஒன்றிய அரசு நிறுத்திய சிறுபான்மை மாணவர்களுக்கான pre matric scholarship தொகையைத் தமிழக அரசு வழங்கிட நடவடிக்கை.

4. பள்ளிவாசல், தேவாலயங்கள் புதிதாகக் கட்டுவதற்கு மற்றும் மராமத்து பணிகள் மேற்கொள்வதற்கு விரைவாக அரசு அனுமதி வழங்குவதற்கு SOP வெளியீடு.

5. இது வரை இல்லாத வகையில் நாட்டிலேயே முதன் முறையாகச் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியது.

6. சிறுபான்மையின மாணவர்களுக்கு ₹.5 லட்சம் வரை கல்விக் கடன்.

7. சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சிறுபான்மை அந்தஸ்து.

8. சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரம்.

9. வக்பு வாரியத்துக்குக் கூடுதல் பணியாளர்கள் நியமனம்

10. மதுரையில் கூடுதலாக வக்பு தீர்ப்பாயம்.

11. உருது வட்டார கல்வி அலுவலர்கள் நியமனம்.

12. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் கீழ் பயன்பெற நடவடிக்கை.

13. கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெற நடவடிக்கை

14. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் நிறுவப்பட்டுள்ளது. தற்போதைய திமுக ஆட்சி அமைந்த பிறகு கூடுதலாக மேலும் 5 சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது

15. மாவட்ட தலைநகரங்களில்/ பெரு நகரங்களில் முஸ்லிம்கள் கபருஸ்தான் இல்லாத பகுதிகளுக்கு கபருஸ்தான் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு.

16. கிராமப்புற சிறுபான்மை இன மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வியைத் தொடர 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

17. உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆணையிடப்பட்டது.

18. உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியத்தில் 15848 பேர் பயனாளிகளாக உள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டது.

19. சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் சென்னை, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, கோவை ஆகிய 5 மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

20. தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் இந்த ஆண்டில் 9217 சிறுபான்மை பயனாளிகளுக்கு 62 கோடி ரூபாய்க் கடன் வழங்கப்பட்டுள்ளது

( File photo)
-WA: Shack Mohammed. G14.

அரசு கொடுத்தவற்றைப் பட்டியலிட்டது போல, அரசிடம் தேவையான, முக்கியமாகப் பெற வேண்டியவற்றை இங்குப் பட்டியலிடுங்கள்.

அனைத்து மக்களும் அவற்றை அவரவர் எதில் பயணிக்கிறார்களோ அதன் மூலம் சட்ட வரம்பிற்கு உட்பட்டு ஒன்றுபட்டு போரடி பெற முயற்சி செய்யலாம்.

இதை வைத்து மேலும் சமுதாயத்தைப் பிளவுபடுத்துவோரை மக்கள் தனிமைப் படுத்தி ஒதுக்குவது பயன் தரும்.
-SA

Location

Other Place,Chennai CH,Tamilnadu

Reviews

There are no reviews yet.

Be the first to review “Govt provided so for in Tamilnadu”