What we need from government
கர்நாடக அரசை முன்மாதிரியாகக் கொண்டு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்துக்கான மேம்பாட்டுத் திட்டங்களைத் தமிழக அரசு நிதிநிலை அறிவிப்பில் வெளியிட வேண்டும்!
—————————
🔹அரசுத் திட்டப் பணி ஒப்பந்தங்களில், வெளிப்படைத்தன்மை சட்டத்தின் கீழ் தலித் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதுபோல, முஸ்லிம் சமூகத்திற்கும் ரூ.2 கோடி வரையிலான பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
🔹 கல்வி, வேலைவாய்ப்பில் 7.5% கொடுக்க வேண்டும்.
🔹சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளை மேம்படுத்த 1000 கோடி ரூபாய் திட்டம்.
🔹 சிறுபான்மை சமூக பெண்களின் உயர்கல்வியை ஆதரிக்கும் வகையில், வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமான காலியிடங்களில் இந்த நிதி ஆண்டில் பெண்கள் உயர் கல்லூரிகள் (மருத்தும் / தொழில் நுட்பம்) வேண்டும்.
🔹வக்ஃப் சொத்துக்கள் மற்றும் அடக்க ஸ்தலங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.150 கோடி.
🔹 முஸ்லிம் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ரூ.50 லட்சம்.
🔹 முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புதிய ஐடிஐ கல்லூரி. முன் உரிமை கொடுக்கப்பட வேண்டும்.
🔹 முஸ்லிம் பெண் மாணவர்களுக்குத் தற்காப்பு பயிற்சி மனவள பயிற்சி.
🔹 3 வரும் கழிந்து Election இல்லாது செயல்படும் அனைவரின் பதவிகளை நீக்க வேண்டும். அதை நிறைவேற்றத் தவறிய அதிகாரிகள் கணி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.
🔹 வஃப் இடங்களில் குத்தகை / வாடகையில் இருப்பவர்கள் அனைவரின் பட்டியலும் இனையத் தளத்தில் பதிய வேண்டும்.
🔹 வஃப் நிலங்களை அனைத்தின் விபரங்களும் இனையத் தளத்தில் கிடைக்க வேண்டும்.
🔹 வஃப் வாரியத்திற்குக் கொடுக்கப்படும் அனைத்து புகார்களையும் இனையத் தளத்தில் பதிய வேண்டும். அந்த புகார்கள்
எந்த அதிகாரியிடம் எதற்காக நிலுவையில் உள்ளது? ஏன் உள்ளது? அதற்கு அந்த அதிகாரி என்ன விபரங்களை யாரிடம் கேட்டுள்ளார்? என்ற விபரம் புகார் சம்பந்தப்பட்ட அனைவருக்கும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களும் எந்த நேரத்திலும் இனகயத்தில் ஆதாரமாகப் பார்க்கும் வன்னம் தேவை.
🔹 வஃப் சொத்துக்கள் குத்தகைக்கு / வாடகைக்குக் கொடுக்க 30 நாட்களுக்கு முன் இனையத் தளத்தில் அறிவித்து போட்டியாளர்களின் விண்ணப்பத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
இதுபோன்ற முஸ்லிம் சமூக மக்களின் நலனுக்கான திட்டங்களைத் தமிழக அரசும் செயல்படுத்த வேண்டும்.
🔺 தர்காக்கள், பள்ளிவாசல்களைப் புனரமைப்பது மட்டுமே ஒரு அரசின் சிறுபான்மை சமூக நலன் திட்டமாக அறிவிப்பது ஏற்புடையதல்ல.
சிறுபான்மை முஸ்லிம் சமூக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், சச்சார் கமிட்டி, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளை நிறைவேற்றும் வகையிலும், வேளாண் நிதிநிலையைப் போன்று, சிறப்புக் குழுக்களை அமைத்து, கர்நாடக அரசைப் போன்று, சிறுபான்மை சமூக மக்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை, நிதி ஒதுக்கீட்டுடன் தனி நிதிநிலை அறிவிப்பாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு வெளிப்படையாகக் கேட்டுப்பெற யார் செயலாற்றுகிறார்களோ அவர்களை மக்கள் ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு முன் உரிமை கொடுக்க வேண்டும்.
அரிசிக்கும், சந்தனக்கட்டைக்கும், இரு சக்கர வாகனத்திற்கும், பக்தி பிரச்சாரத்திற்குச் சொற்ப பணமும் பெறுவர் பின் செல்பவர்கள், பெருமிதம் அடைபவர்கள் வேண்டாம். இவர்கள் உபயோகமற்றவர்கள்.
மேலும் சரியான தேவைகளைக் கோர்வையாக இங்குப் பதிவு செய்யுங்கள்.
அரசைக் குறை சொல்லும் முன் சமுதாயத்திற்கு எது தேவை? எதைக் கேட்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
-SA
Location
Be the first to review “What we need from government”
You must be logged in to post a review.



Reviews
There are no reviews yet.